என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பசுக்கள் கடத்தல்
நீங்கள் தேடியது "பசுக்கள் கடத்தல்"
ஜார்க்கண்ட் மாநிலம் துல்லு கிராமத்தில் பசுக்களை கடத்தியதாக கருதி கிராம மக்கள் 2 பேரை அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் துல்லு கிராமத்தில் 2 நாட்களுக்கு முன் 13 பசு மற்றும் எருமை மாடுகள் திருட்டு போனது.
இதையடுத்து கிராம மக்கள் உஷார் ஆனார்கள். அந்தப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 13 மாடுகளையும் ஓட்டிக்கொண்டு 5 பேர் சென்றனர். அவர்களை கிராம மக்கள் சுற்றி வளைத்தனர்.
உடனே 5 பேரும் மாடுகளை விட்டு விட்டு தப்பி ஓடினார்கள். அவர்களை கிராம மக்கள் துரத்தினார்கள். இதில் 3 பேர் தப்பினார்கள். 2 பேர் கிராம மக்களிடம் சிக்கினார்கள். அவர்களை ஊருக்குள் அழைத்து வந்து கட்டி வைத்து கட்டையால் தாக்கினார்கள். கல்லாலும் அடித்தனர்.
இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் பலியானார்கள். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று 2 பேர் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.
கொலையுண்ட ஒருவர் பெயர் முர்தாஸா (30). மற்றொருவர் சிராஜுதின். இவர்களது உறவினர்கள் கூறும்போது, “இருவரும் மாடு வியாபாரிகள், மாடுகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்தனர். தவறாக கருதி அடித்துக் கொன்று விட்டார்கள்” என்று தெரிவித்தனர்.
2 பேர் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். 13 மாடுகளும் மீட்கப்பட்டன.
இதற்கிடையே மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் குழந்தை கடத்தல்காரன் கிராம மக்களால் அடித்து கொலை செய்யப்பட்டான். இந்த இரு சம்பவங்களால் இரு மாநிலங்களிலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. #Tamilnews

×

X